பயணிகளுக்கு சேவைகளை வழங்காமல், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருள் பெற்று எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாளொன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தனர்.

ஏறத்தாழ 70% பேரூந்துகள் பயணிகளின் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிபொருளை ஏனைய தரப்பினருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.