இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இலங்கையிலிருந்து மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் செல்வதற்கு இந்தியா எந்த வகையிலும் வசதிகளை வழங்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் நிலைமை குறித்து இந்தியா கவலையடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்ற நெருக்கடி இந்தியாவில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கிய இந்தியா

இலங்கையின் அண்டை நாடாக இந்தியா இருப்பதால், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா பாதிக்கப்படுமோ என்ற கவலை இந்தியாவுக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மற்ற நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

தவறான ஒப்பீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் என்று எஸ். ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அதிமுக கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, திலகனா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You missed