TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?


இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தெருவில் டலஸ் அழகபெருமவுக்கு த. தே.கூ ஆதரவு வழங்குவது என நேற்று கூடி முடிவெடுத்திருந்தது. இந்த முடிவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் வீட்டுக்குச் சென்றதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.