நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள அரசுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள், தொடரும் வெள்ள அபாயம் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளமைத்தல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கை–நேபாளம் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் சமய நட்புறவின் அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
