மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட துறைநீலவணை மகாவித்தியாலய மைதானத்தை இணைக்கும் வீதி
இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரிற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மண்முனை தென்எருவில்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த வேலைத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சுந்தரலிங்கம் இளமாறன், முகில் வண்ணன் ஹேமச்சந்திரன்,
சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆலைய நிருவாகிகள் கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






