அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவப் பெருவிழா 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வுகள்: 🔸 கொடியேற்றம்: 2026.06.17 (புதன்கிழமை)
🔸 தீர்த்தோற்சவம்: 2026.06.22 (திங்கட்கிழமை)
விழா நிகழ்ச்சிகள்: 🔹 2026.06.16 முதல் 2026.06.22 வரை தினமும் விசேட பூஜைகள், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா இடம்பெறும்.
🔹 விழா நாட்களில் தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு அருளுரை நிகழ்ச்சியும் பகல் அன்னதானமும் நடைபெறும்.
இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருளாசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர். 🙏🏻🕉️



