கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆலய நிருவாகத்தினரும், அபிவிருத்திக் குழுவினரும் பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதி உதவிகளை கோரி வருகின்றனர். இவ்வாறு கிடைக்கும் நிதியின் ஊடாக ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வைத்தியசாலை குழுவினரால் கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, முதற்கட்டமாக ஒரு இலட்சம் (100,000) ரூபாய் நிதியுதவி இன்று (01) வழங்கப்பட்டது.

குறித்த நிதி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பின் சார்பில் கோகுலவதனி நரேஷ்குமார், நரேஷ்குமார் பரமானந்தராஜா, ஆனந்தலிங்கம் வைரமுத்து மற்றும் விஜயரத்தினம் நொனிசப்பு ஆகியோர் இந்த முதற்கட்ட நிதியுதவியை வழங்கியிருந்தனர்.

இதன்போது, கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பினரின் பங்களிப்புக்கு வைத்தியசாலை பணிப்பாளரும், வைத்தியசால ஆலய நிர்வாகத்தினரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.