( வி.ரி.சகாதேவராஜா)
சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள், மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் சாசனத் தலைவர் லயன் என். புஷ்பஹரன் MJF/MAF மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எம். சுதாகரன் MJF/MAF ஆகியோரால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.
இவ்வாறான பெறுமதிமிக்க அன்பளிப்பின் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வன்பளிப்பை வழங்குவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் வைத்தியசாலையின் சார்பிலும், பணிப்பாளர் அவர்களினாலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.




