தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில், கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினரால் இன்று (17) கல்முனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் இளைஞர் சேனையின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.