உலக தாதிய தினம் கல்முனை ஆதார  வைத்தியசாலையில் (12) கொண்டாடப்பட்டது.
மேலும் ஒரு வார காலமாக பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது. இதில் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வுகள் யாவும் தாதிய பரிபாலகர் திரு சசிதரன் அவர்களின் முழு பொறுப்பிலும், தலைமையிலும் நடைபெற்றுள்ளது.

நேற்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக கலாநிதி சங்கரப்பிள்ளை சுஜேந்திரன்
பேராசிரியர் ( சுகாதார விஞ்ஞானபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களும்,  திருமதி லோகினி தேவி சுஜேந்திரன் (ஓய்வு நிலை தாதிய பரிபாலகி) அவர்களும் இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகT. தேவ அருள் அவர்களும் திரு. சிவரஞ்சன் தாதிய உத்தியோத்தரின் நலம்புரிச் சங்க செயலாளரும் கலந்து கொண்டார்


சிறப்பு அதிதிகளுக்கான கௌரவிப்புடன் ஓய்வு பெற்ற தாதியர்கள், தாதிய பரிபாலகர், பதவியுயர்வு பெற்ற தாதியர் திருமதி தேவஅருள் என பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வை அலங்கரிக்க நாட்டியம், பாடல் என பல கலை நிகழ்ச்சிகளும் இணைக்கப்பட்டிருந்தது.

திருமதி. உதயபானு தேவ அருள் தாதிய சகோதரியாக பதவி உயர்வு பெற்றதனால் தற்போது அம்பாறை தாதிய கல்லூரியில் ஒன்றரை வருட கால கல்வியை தொடர்கின்றார் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

(பிரதம அதிதி வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் சிறப்புரை 2026)

இன்று (12) கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற தாதிய தினத்தை முன்னிட்டு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் கல்முனை ஆதார வைத்திசாலையின் தாதியர்களின் தாதியசேவை,   உதவும் மனப்பாங்கு என்பவை மிக உயர்ந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளதன் காரணமாக வைத்தியசாலை பெற்று வரும் நற்பெயருக்காக தாதியர்களின் சேவையை பாராட்டி உரையாற்றினார்.

தாதிய சேவைக்கான உச்சம் தொட்ட பாராட்டு உரை  இங்கே   https://www.facebook.com/reel/1735545271150011