செல்லையா பேரின்பராசா.

கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிலையில் பலமடைய வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டார்.

துறைநீலாவணை அண்ணா சனசமூக நிலைய கட்டிடத்தில் இப் பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆங்கில மொழி மூலமான முன்பள்ளியினால் நடாத்தப்பட்ட சித்திரை வசந்தம் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அங்கு மேலும் பேசுகையில்.

எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது இப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களில் இவ்வாறான ஆங்கில மொழி மூலமான முன்பள்ளிகளை அமைத்து அவற்றை வினைத்திறனுடன் இயங்க வைப்பதற்காக வெகு விரைவில் பிரிட்டிஸ் கவுன்சிலுடன் ஒப்பத்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளது.

நாம் எமது சிறார்களை சர்வதேச தரம் வாய்ந்த தொழில் துறைகளுக்குள் பிரகாசிக்க வைக்க வேண்டுமென்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறான முன்பள்ளிகளை ஆரம்த்துள்ளோம்.

இதே வேளை மேலும் மூன்று ஆங்கில மொழிமூலமான முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்காக அரசாங்கம் எமக்கு ஏழு மில்லியன் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.  இதற்கமைய செட்டிபாளையம் கிராமத்திற்கு மூன்று மில்லியன் ரூபாவும் பெரியகல்லாறு மகிழூர் கிராமங்களுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபாய் நிதி அங்கில முன்பள்ளியமைக்க பகிந்தளித்துள்ளோம். அடுத்த மாதம் தொடக்கம் இந்த முன்பள்ளிகள் இயங்கவுள்ளதென்றார்.

இந் நிகழ்வில் இப் பிரதேச சபையின் செயலாளர் ச.யோகநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் த.பிறேமரூபன்,  அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.துஷ்யந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.