சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ். மாதாந்த கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு இவ்வருடத்துக்கான இரண்டாம் கட்ட. கொடுப்பனவுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
மே, ஜூன், ஜூலை ,ஆகஸ்ட், மாதங்களுக்கான கொடுப்பனவுகள் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர். திரு என். சௌவிய தாசன். மற்றும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் திரு கண வரதராஜன் ஆகியோரால். திருக்கோவில் பிரதேசம் சம்மாந்துறை பிரதேசம் நுவரெலியா நானு ஓயா பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களுக்கான. மாதாந்த கல்வி ஊக்குவிப்புக்கான கொடுப்பனவே வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
உதவும் பொற்கரங்கள் அமைப்பின். தாரக மந்திரமான “தமக்காக வாழ்வது இன்பம். பிறருக்காக வாழ்வது பேரின்பம் ” என்பதற்கு அமைவாக விசு கணபதிப்பிள்ளை அவர்களின் சொந்த நிதியின் ஊடாக தொடர்ச்சியாக மாணவர்களுக்கான ஊக்குவிப்பு உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.




