செல்லையா பேரின்பராசா 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களுக்கு – அவர் பிறந்த இடமாகிய புத்தூர் கிராமத்தில் கல்வி பயின்ற சோமாஸ்கந்த கல்லூரியில் எதிர்வரும் 05.03.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது . 

சோமாஸ்கந்த கல்லூரி அதிபர் சி திரிகரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சமய தலைவர்களின் ஆசியுரைகள் சமூகத் தலைவர்களின் வாழ்த்துரைகள் மற்றும் பாராட்டுரைகள் என்பன இடம் பெற உள்ளன 

வேல்நம்பி குறித்தான ஆவணப்பட வெளியீடு மற்றும் புதுவை நம்பி என்ற பாராட்டு விழா சிறப்பு மலர் வெளியீடு என்பன இடம்பெற உள்ளன. 

முன்னதாக விழா நாயகர் புத்தூர் கிழக்கு காளி கோவிலில் இருந்து விழா மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளார்