நாவிதன்வெளி பிரதேசத்தில் மற்றுமொரு வைத்தியர்.
கே.எஸ்.கிலசன்
நாவிதன்வெளி பிரதேசத்தின் 15ம் கிராமத்திலிருந்து இரண்டாவது வைத்தியர் எனும் பெருமையை பெறுகிறார் அன்பழகன் பிரஜித். உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்டத்தில் 27 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் காணிப் பிரிவில் CO ஆக கடமையாற்றும் அன்பழகன் மற்றும் தமிழ் பாட ஆசிரியை யுகானந்தி தம்பதிகளின் மகனான பிரஜித் அமைதியான இயல்பும் மரியாதையான குணமும் கொண்டவர்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை 15ம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும், சாதாரண தரம் வரையில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும், உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலும் கற்றிருந்தார்.
கிராமப் புறங்கலிருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாக வேண்டுமென்ற பலரது கனவையும் நனவாக்கியுள்ள பிரஜித் தன்னுடைய முழுமையான முயற்சியாலும், பெற்றோர்களின் பெருந்துணையாலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் வழிகாட்டுதலாலும் இந்த இடத்தை பெற்றுள்ளார். இது பின்தங்கிய கிராமப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை.
