கே.எஸ்.கிலசன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மண்டூர் தம்பலவத்தை கிராமத்தை சேர்ந்த போசராசா டிவான் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தினையும் தேசிய ரீதியில் 231வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை கணேசா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரையிலான கல்வியினை கற்று உயர்தரத்தினை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தொடர்ந்தார். விவசாய குடும்ப பின்னணியை கொண்ட இவரது குடும்பத்தில் இவரது சகோதரியும் ஏற்கனவே பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு தனது கற்கையை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வருகிறார்.

வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் பிள்ளைகள் கிராமப்புறங்களிலிருந்து பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளில் கல்வியை தொடர்வது பெரும் சவாலான விடயமெனினும் தமது முயற்சியால் வெற்றிகண்டு பொறியியலாளராகும் தமது கனவினை நிறைவேற்றியுள்ளார் டிவான்.