சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெற்றன.,


குறித்த நிகழ்வானது 29.3.2026 ஞாயிற்றுக்கிழமை கல்முனை சைவமகாசபை அறநெறிப்பாடசாலையிலும் சிறப்பாக நடைபெற்றது.


கல்முனை சைவ மகாசபையின் தலைவர் திரு அரசரெட்ணம் தலைமையில் அறநெறிப்பாடசாலை அதிபர் செல்லி ஜெயந்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிரிய ஆலோசகர் கா.சாந்தகுமார் கலந்து சிறப்பித்தார்.


இந் நிகழ்வில் மாணவர்கள் ஒழுக்கம், பாண்பாடு ,விழுமியம் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, கதை ,உரை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளைச் செய்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.