மட்டக்களப்பு பாழ்ங்கிணறு படுகொலையாளிகளை  தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு;  மட்டு.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு 

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டில் வயலில் காணப்பட்ட பாழ்ங்கிணற்று படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில்  தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

மட்டக்களப்பை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலை தொடர்பான வழக்கு நேற்று (23) திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 அச்சமயம் இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனசந்தேகிக்கப்படும் ஐந்து பேரையும் கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் ஆஜராக்கினர்.

அங்கு சந்தேகநபர் மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்கவும்,

 ஏனைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் தேதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

கடந்த 19.03.2026 அன்று மட்டக்களப்பு நகருக்கு தனது  குழந்தையுடன் சென்றிருந்த  கொத்தியாபுலையைச் சேர்ந்த பெண் கடத்தப்பட்டு தாலிக்கொடியினை களவாடிய பின்னர் 2  1/2 வயது குழந்தையை வயல்வெளியில் வீசி விட்டு தாயை தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றில் வீசிய சம்பவம் நேற்று நாட்டை அதிர்ச்சி அடையச் செய்திருந்ததமையும் அங்கு ஏலவே உருக்குலைந்த நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலத்தை மீட்டமையும் தெரிந்ததே.