செல்லையா பேரின்பராசா 

இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட மேலங்கி ( T-shirt ) அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை   (27.06.2026) கல்முனையில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் திருமாறன் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இத் தொழிற்சங்க ஆலோசகரும், கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின்  முன்னாள் பிரதம உள்ளக கணக்காய்வாளருமான எச் .எம் . றசீட், கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக தொழிற்சங்க ஸ்தாபகரும், ஊடகப் பேச்சாளருமான க.நடராஜா,  இத் தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ. புஹாது ஆகியோருடன் தேசிய அமைப்பாளர் எஸ். எல் . பசீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழிற்சங்கத்தின் புதிய மேலங்கி உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.