செல்லையா பேரின்பராசா 

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உகந்தை முருகன் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு வருடாந்தம் மேற்கொள்ளப்படும்  சிரமதான பணியானது இவ்வருடமும் பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில்  இடம்பெற்றது.  

இந்த சிரமதான நிகழ்வில் கணக்காளர் வ. நாகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர்  மு. கங்காதரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த உன்னதமான பணியை மேற்கொண்டிருந்தனர்.