( வி.ரி. சகாதேவராஜா)
எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் இன்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒஸ்கார் ஆலோசகர் விவேகானந்தன் சஞ்சீவின் அனுசரணையில், அவரது பெற்றோரான காலஞ்சென்ற கலாநிதி விவேகானந்தன் மற்றும் அருள்மணிதேவி ஆகியோரின் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, காரைதீவு பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பல தரப்பினரின் உதவியுடன் இடம்பெற்றது.
கண், பல் ,பொது வைத்தியம் சட்டம் என பலதரப்பட்ட பிரிவுகளில் சிகிச்சை வழங்கப்பட்டன.
மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இம் முகாமில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பாடசாலை மாணவர்களுக்கு உள்ள மற்றும் வலுவூட்டும் பயிற்சியை, கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் நிகழ்த்தினார்.
இம் முகாமில் ஆயிரக்கணக்கான பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வு சமூக நலனை முன்னிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.














