“தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்!
தினக்குரல் பத்திரிக்கையின் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரோஷன் சாமுவேல் அவர்களுக்கு, journalisam awards for excellence 2024 விருது வழங்கி இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் கௌரவித்துள்ளது.
இளைஞனாக இருந்தாலும், ரோஷன் சாமுவேல் அவர்களிடம் காணப்படும் தொழில்முறை முதிர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.
ஒரு பத்திரிகையை எவ்வாறு திட்டமிட்டு, காலத்துக்குள் சிறப்பாக உருவாக்கி முடிக்க வேண்டும் என்பதில், பல ஆண்டுகால அனுபவமும் கற்றுத் தராத பல நுணுக்கங்களை அவர் குறுகிய காலத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பின்னால் திட்டமிடல், நேரம் தவறாமை, மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
மேலும் சமூக நேயம் கொண்ட அவரது பணிகள், பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இவர் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் தரம் 8 முதல் உயர் தரம்வரை ( 2008 ) கல்வி கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல வெற்றிகளைப் பெற, றொசன் சாமுவேல் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


