-P.S.M –

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக பொதுமக்களின்  நிதி, பொருள் உதவி கோரல்.

அன்னிய ஆட்சி கால வரலாற்றுத் தொன்மையும், அடியார்களுக்கு அருள் புரிதலில் வள்ளலுமாக எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ சித்தி விநாயக பெருமானின் ஆலயம், மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு புதுப்பொலிவு பெற கட்டிட நிர்மான பணிகள் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாலயத்தை, வளர்ச்சி அடைய செய்வது உலக வாழ் நல் மக்கள் அனைவரினதும் பெரும் பொறுப்பாகும். பலர் தாமாகவே முன்வந்து உதவ உடன்பட்டும் உள்ளனர்.

பல சமய பற்றாளர்களினால் நன்கு திட்டமிடப்பட்டு மிக்க சிரமத்தின் மத்தியில் உருவாக்கிய வரலாற்று பொக்கிஷம்.
இதை பாதுகாக்க உங்கள் அனைவரினதும் முழு பங்களிப்பும் இவ் ஆலயத்திற்கு மிக அவசியமான காலம்.

அந்த வகையில் கல்முனைநெட் ஊடக வலையமைப்பின் ஊடாக எமது நோக்கை உங்களுக்கு தெரிவிப்பதில் , மகழ்வுறுகின்றோம்.

பக்த கோடிகள் மனமுவந்து அன்பளிப்பை வழங்கி உதவுமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

தொடர்புகளுக்கு
(தலைவர்)
Dr. கு. சுகுணன்        0773417477

N. கேந்திரமூர்த்தி    0777713929
P . செல்வகுமார்       0741346767
Mrs.A.கணேசலதா  0763652036
ப.சந்திரமோகன்      0759617482

கணக்கு இல 0006104988
இலங்கை வங்கி, கல்முனை கிளை.

நீங்கள் செய்ய வேண்டியது நிதியினை ஆலய வங்கி இலக்கத்திற்கு வைப்புச் செய்து பற்று சிட்டினை எம்மால்  வழங்கப்பட்டுள்ள
இரு whatsapp மேலே உள்ள இலக்கங்களுக்கு அனுப்பி வைப்பதுடன்,
தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அன்பளிப்பை உறுதி செய்யுமாறு கேட்கின்றோம்.

நேரடியாக அன்பளிப்பை கொடுக்க விரும்பியவர்கள் தொடர்பு கொள்ள
Mrs.A.கணேசலதா  0763652036

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு இலக்கங்களுடன் இணையுங்கள்.

“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்; ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!”

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு

இவ்வாலயம் இரண்டு வெவ்வேறுபட்ட கால வரலாற்று  பதிவுகளை கொண்டு உள்ளது.
அதாவது அன்னியர் ஆட்சிக்கு முற்பட்டதும் பிற்பட்டதுமான வரலாறுகள்.
அன்னியர் ஆட்சிக்கு முன்பாக கல்முனைப் பிராந்தியத்தில் இப்பிரதேசம் ஒரு மேட்டு நிலமாக திகழ்ந்துள்ள வேளையில், ஏனைய பிரதேசங்கள் பள்ள பிரதேசமாகவும், இப்பிரதேத்தில் இருந்து அதாவது பிரதான வீதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கடல் அலைகள் வந்து செல்வதாகவும், நல்ல காற்றோட்டமான பகுதியாகவும்  கூறப்படுகின்றது.

இந்த மேட்டு நிலத்தில் சவுக்கு மரங்கள் நிறைந்ததால் சவுக்கு தோப்பு என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இதன் கீழாக பல்வேறு பட்ட மூலிகைகள் நிறைந்து காணப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றது.

இதற்கு காரணம் இங்கு ஒரு தமிழ் வைத்தியர் (நாட்டு வைத்தியர்) மரபு
ரீதியாக மக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், இங்கு பெறப்பட்ட மூலிகைகள் மூலம் நாட்டு மருந்தும் (சித்த வைத்தியம்) செய்து வந்துள்ளார். அவர் வழிபட்ட கருங்கல் பிள்ளையாரே ஆலயத்தின் மூல விநாயகர் என்று கருதப்பட்டுள்ளது.
இந்த நாட்டு வைத்தியரின் சிகிச்சை மிக பிரபலியம் பெற சித்தி விநாயகப் பெருமாளின் அருளே காரணம் எனவும் இப் பிரதேச மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். 

அன்னிய ஆட்சிக் காலத்தில் பல நோய்களால் அல்லலுற்ற அன்னியர்கள். (அதாவது அம்மை, தொழுநோய் போன்ற நோய்கள்) இந்த நாட்டு வைத்தியரை நாடி பலன் பெற்றும் உள்ளனர்.
அத்துடன் மன்னர் ஆட்சிக்காலத்தில் இங்கு இயங்கிய வைத்திய நிலையத்தையும் தமதாக்கி அங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தரிக்க வைத்து இருந்தனர் அன்னிய நாட்டு ஆங்கில வைத்தியர்கள்.
அன்னியர்களினால் இவ்விடம் தெரிவு செய்யப்பட்தற்கான காரணம் ஒன்று மேட்டு நிலம் மற்றது சித்த வைத்தியத்திற்கான தேவையாகவும் இருந்துள்ளது.

இதே போல் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள ஆலயங்களின் மகிமையை உணர்ந்த அன்னியர்கள் இலங்கையை கைவிட்டுச்செல்ல எண்ணியதுடன், இங்கிருந்தும் சென்றனர்.
அதே வேளை இந்த ஆங்கில மருத்துவ நிலையத்திலிருந்த ஒரு ஆங்கில வைத்தியர் தோமஸ் என்பவர் இந்த நாட்டு வைத்தியத்திலும், விநாயகப் பெருமானின் மகிமையிலும் ஈர்க்கப்பட்டு இங்கேயே தங்கி ஆங்கில முறைப்படியான சிகிச்சையை அளித்து வந்துள்ளார்.


இவர் உயிரிழக்கும் வரை இங்கேயே வாழ்ந்ததாக சான்றுகள்  கூறப்படுகின்றன. வைத்தியசாலையில் இணைந்ததாக தமிழ்நாட்டு வைத்தியர் இருந்த இடமே  இந்த விநாயகப் பெருமானின் ஆலயம். அதே போல் ஆங்கில மருத்துவ நிலையம் இருந்த இடமே தற்போதைய ஆதார வைத்தியசாலை என்று கூறப்படுகின்றது.
1858  இல் ஆரம்பிக்கப்பட்ட அரச சுகாதார சேவையின் ஆரம்ப நிலையமாக இயங்கிய நிலையில் 1920-1980 காலப்பகுதி விஸ்தரிப்பின் பயனாக இவ் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


இதன் பின் அங்கு இருந்த நிர்வாகத்தினால் கற்சிலைப் பிள்ளையாருக்கு  முறைப்படி ஆலயம்  அமைக்கப்பட்டு பூசைகளும் ஆரம்பமாகியுள்ளது. வைத்தியசாலையின் ஆலய அமைப்புக்கு வைத்திய கலாநிதி ஆர் ஜெகநாதன் ஐயா (ஓய்வு நிலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்) அவர்களுடன்  வைத்தியகலாநிதி அமரர் சிவஅன்பு ஐயா (பிரபல கதாப்பிரசங்கி) சமுக சேவையாளர் அமரர் திரு சண்முகம் (பொது சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தர்) ஆகியோருடன் இணைந்த குழுவினர் கட்டிடத்தை ஆரம்பித்து கற்சிலை பிள்ளையாருக்கு ஆலய வடிவம் கொடுத்தனர்.
அதன்பின் வந்த நிர்வாகங்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆலயத்தின் வளர்ச்சிக்கு  மென்மேலும் மெருகூட்டி வந்துள்ளனர்.