இராசதுரைக்கு துறைநீலாவணையில் அஞ்சலி.

செல்லையா-பேரின்பராசா .

மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சொல்லின் செல்வர், கலாநிதி. செல்லையா இராசதுரைக்கு துறைநீலாவணை மண்ணில்  துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் வைத்தியகலாநிதி திருமதி.எஸ்.எஸ்.மானதுங்க  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் ஓய்வு நிலை அதிபருமான த.கணேசமூர்த்தி, இக் குழுவின் உப தலைவரும், ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தருமான க.அழகரெத்தினம், ஓய்வு பெற்ற வைத்தியசாலை உத்தியோகத்தர் க கோபாலன் ,சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான செல்லையா-பேரின்பராசா,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து தாதிய உத்தியோகத்தர்.பி.சுரேந்திரா  ஓய்வு பெற்ற வரி மதிப்பீட்டாளர் க.குணரெத்தினம் மருந்தாளர் அ.இளஞ்செழியன் ஆகியோர் அன்னாரின் பன்முகப்பட்ட சேமநலப் பணிகள் பற்றி உரையாற்றியதுடன்,  கவிதாஞ்சலியும் இடம்பெற்றதுடன், துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையை 30.08.1982 ஆம் ஆண்டு அமைத்து தந்தமையை இங்கு உரையாற்றிய யாவரும் நன்றிப்பெருக்குடன்  நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.