செளவியதாசன்

கடந்த 27 ம் திகதி முதல் அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில்
தடைப்பட்ட மின் விநியோகம்
சற்று முன் வழமைக்கு திரும்பியது!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று பிற்பகல் அப்பகுதிக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. மின்சாரம் தடைப்பட்டிருந்த 10 நாட்களும் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீட்டிச்சென்றது.