சிடாஸ் அமைப்பினால் கோறளைப் பற்றுப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப் பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிகவும் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு 05.12.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிடாஸ் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிடாஸ் அமைப்பின் தலைவர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் செயலாளர் திரு.சாமித்தம்பி மோகனதாஸ் அவர்களும் அமைப்பின் நிருவாக உறுப்பினர் திரு.பேரின்பராஜா கிருபாகரன் அவர்களும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.





