வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு
வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் நாட்டில் இடம்பெற்ற அனர்த்த நிலமைகளிலிருந்து மீள் எழுச்சி பெறவேண்டி அருட்பெரும் ஜோதி தீப பிரார்த்தனையும்,தியானமும் நடைபெற்றதோடு , அருட்பிரகாச வள்ளல் பெருமானின் ஜீவகாரூண்ய நிகழ்வும்,கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதற்கான தீபங்களும் 04) பெரியநீலாவணையில் வழங்கிவைக்கப்பட்டன.
கார்த்திகை தீப திருநாளில் அனைவரும் மாலை வேளையில் ஜோதி தீபங்களை ஏற்றி எமது நாட்டில் இடம்பெற்ற அனர்த்த இடர்பாடுகளிலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டி வழிபாடுகளிலும்,தியானத்திலும் ஈடுபட்டனர்.
















