சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம்.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 504 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏதேனும் பேரிடர் தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

24.11.2025 திங்கட் கிழமை மாலை 4.00 மணி

அனர்த்த அவசர எச்சரிக்கை

இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறு தினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்று தெற்கு நோக்கி, ஆரம்பத்தில் முழுவதும் இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் இலங்கையின் கிழக்கு கரையில் அரைவாசிப்பகுதி நிலப்பகுதியிலும் அரைவாசிப்பகுதி கடற்பகுதியுமாக நகர்ந்து எதிர்வரும் 27.11.2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தினை அண்மித்து, எதிர்வரும் 30.11.2025 அன்று வடமாகாணத்தில் இருந்து நீங்கி மேலும் வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதே வேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தில் ஏற்கெனவே பல ஆறுகள் அவற்றின் கொள்ளளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.

==================================

  1. ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
  2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  1. அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும், அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.

ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது.

  1. காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம்.
  2. நாட்டின் அனைத்து மீனவர்களும் நாளை முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
  3. வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.
  4. நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  5. எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

9.எதிர்வரும் 28,29ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

  1. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது.

==================================

வானிலை தொடர்பான முன்னறிவிப்புக்கள் எப்போதும் மாதிரிகளை(Modelings) அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். அது எப்போதும் 100 வீதமும் அது போன்றே நடக்கும் என கூற முடியாது. சில விலகல்கள் இருக்கலாம்.

அனர்த்த தயார்ப்படுத்தல் நிகழ்ந்து அனர்த்தம் நிகழாமல் போனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருந்தும் அதற்கு தயாராகமல் இருந்து, அனர்த்தம் நிகழ்ந்தால் ஏற்படும் பாதிப்புக்கள் மீளமைக்க முடியாத பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

+++ தொடர்ந்து இந்த சீரற்ற வானிலை தொடர்பான இற்றைப்படுத்தல்களை வழங்குவேன் ++++++

  • நாகமுத்து பிரதீபராஜா-

2025.11.24 සඳුදා සවස 4.00

ආපදා හදිසි අනතුරු ඇඟවීම

ශ්‍රී ලංකාවේ නිරිතදිග සහ ගිනිකොන දෙසින් ඇති වායු සංසරණය පිළිවෙලින් නැගෙනහිර සහ බටහිර දෙසට ගමන් කර හෙට (2025.11.26) ඒකාබද්ධ වී අඩු පීඩන ප්‍රදේශයක් බවට ශක්තිමත් වී දකුණ දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මුලින් සම්පූර්ණයෙන්ම ශ්‍රී ලංකා ගොඩබිම හරහා ගොස් පසුව ශ්‍රී ලංකාවේ නැගෙනහිර වෙරළ තීරය දිගේ, ගොඩබිමෙන් සහ මුහුදෙන් අඩක් හරහා ගමන් කරනු ඇත. ඉදිරි 2025.11.27 වන දින, එය අඩු පීඩන ප්‍රදේශයක් දක්වා ශක්තිමත් වී නැගෙනහිර වෙරළ තීරය දිගේ ගමන් කර උතුරු පළාතට ළඟා වනු ඇත. එය ඉදිරි 2025.11.30 වන දින තවදුරටත් උතුරු දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. ඉදිරි 2025.11.27 වන දින එය අඩු පීඩන ප්‍රදේශයක් බවට ශක්තිමත් වී නැගෙනහිර වෙරළ තීරය දිගේ දිගටම ගමන් කර උතුරු පළාතට ළඟා වනු ඇත. ඉදිරි 2025.11.30 වන දින එය උතුරු පළාතෙන් ඉවත්ව තවත් උතුරු දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
එහි ප්‍රතිඵලයක් ලෙස, හෙට දින උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව රටේ බොහෝ ප්‍රදේශවල තද වැසි ඇති විය හැකිය.
මේ අතර, 2025.11.26 සිට 2025.11.29 දක්වා කාලය තුළ උතුරු සහ නැගෙනහිර පළාත්වලට මෙන්ම බටහිර, දකුණු, මධ්‍යම, සබරගමුව, ඌව සහ උතුරු මැද පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට ඉතා තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.

2025.11.26 සිට නැගෙනහිර, දකුණු, බටහිර, මධ්‍යම, සබරගමුව සහ ඌව පළාත්වල පැයට කිලෝමීටර 50-70 ක වේගයෙන් සුළං හමා යනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
මේ අතර, 2025.11.27 සිට උතුරු සහ උතුරු මැද පළාත්වල පැයට කිලෝමීටර 50-70 ක වේගයෙන් සුළං හමා යනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

දකුණු, බටහිර, සබරගමුව, මධ්‍යම සහ ඌව පළාත්වල ගංගා රාශියක් දැනටමත් ඒවායේ ධාරිතාව ඉක්මවා ගලා යමින් පවතී. බොහෝ ස්ථානවල ගංවතුර ආපදා සිදුවී ඇත. මේ අතර, ඉදිරි දිනවලදී ඉතා තද වැසි අපේක්ෂා කෙරේ.

පසුගිය දින කිහිපය තුළ ඇද හැලෙන අධික වර්ෂාව හේතුවෙන් උතුරු සහ නැගෙනහිර පළාත් ජලයෙන් යටවී ඇත. ඒ සමඟම, ඉදිරි දිනවලදී ඉතා තද වැසි අපේක්ෂා කෙරේ.

  1. එබැවින්, දේශගුණික විපර්යාසයකට සම්බන්ධ ශ්‍රී ලංකාවේ සියලුම දෙපාර්තමේන්තු සහ පළාත් පාලන ආයතන, 2025.11.25 සිට 2025.11.30 දක්වා අධික වර්ෂාව, අධිවේගී සුළං සහ ගංවතුර ඇතිවීමේ හැකියාව සම්බන්ධයෙන් වහාම පූර්වාරක්ෂාව ගත යුතුය.
  2. උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව රටේ සියලුම ජනතාව ප්‍රධාන ව්‍යසනයකට සම්පූර්ණයෙන්ම සූදානම් විය යුතුය.
    පහත් බිම් ප්‍රදේශ, ගං ඉවුරු සහ පොකුණු වලින් ජලය ගලා යන ප්‍රදේශවල ජනතාව අවදියෙන් සිටිය යුතුය.
  3. මුද්‍රිත, විද්‍යුත් සහ සමාජ මාධ්‍ය මෙම ව්‍යසනයේ හැකියාව, එහි ඇති විය හැකි බලපෑම් සහ ඒවායින් ආරක්ෂා වීමට ඇති ක්‍රම පිළිබඳව සියලු ජනතාවට තොරතුරු ප්‍රචාරය කළ යුතුය. මේ සඳහා, අදාළ දෙපාර්තමේන්තු වලින් තොරතුරු ලබා ගැනීම අවශ්‍ය වේ.
    නමුත් මාධ්‍ය මගින් සපයන තොරතුරු ජනතාව කනස්සල්ලට පත් නොවන ආකාරයෙන් සකස් කිරීම වැදගත් වේ.
  4. දේශගුණික විපත් කල්තියා පුරෝකථනය කළ හැකිය. එම අනාවැකි සහ අදාළ දෙපාර්තමේන්තු වල උපදෙස් අප අනුගමනය කරන්නේ නම්, අපට කිසිදු හානියක් නොමැතිව ආරක්ෂා විය හැකිය.
  5. හෙට (2025.11.25) සිට ඉදිරි 2025.11.30 දක්වා රටේ සියලුම ධීවරයින් කිසිදු හේතුවක් නිසා මුහුදු නොයා යුතුය.
  6. උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ගොවීන් ඉදිරි 2025.11.30 දක්වා පොහොර යෙදීම සහ පළිබෝධනාශක සහ වල්නාශක ඉසීම වැනි කිසිදු කෘෂිකාර්මික කටයුත්තක නිරත නොවිය යුතුය.
  7. රට තුළ අනතුරුදායක මාර්ග ලෙස සලකුණු කර ඇති මාර්ග භාවිතා නොකරන්න.
  8. ඉදිරි නොවැම්බර් 27 සහ 28 යන දිනවල නැගෙනහිර පළාතට ඉතා තද වැසි ලැබීමට ඉඩ ඇත.
  9. ඉදිරි 28 සහ 29 යන දිනවල ඉතා තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

10. එබැවින්, ඉහත සඳහන් කළ පළාත් දෙකෙහි සහ ඒවාට ඇතුළත් දිස්ත්‍රික්කවල පරිපාලනයන් මේ සම්බන්ධයෙන් ප්‍රමාණවත් සූදානමක් ඇති කර ගැනීම වඩා හොඳය.

කාලගුණ අනාවැකි සෑම විටම ආකෘති නිර්මාණය මත පදනම්ව සිදු කෙරේ. එය සෑම විටම සියයට සියයක්ම එසේ සිදුවනු ඇතැයි පැවසිය නොහැක. සමහර අපගමනයන් තිබිය හැකිය.
ආපදා සූදානම සිදු කර ව්‍යසනය සිදු නොවන්නේ නම්, කිසිවෙකුට බලපෑමක් නැත. නමුත් ව්‍යසනයක් සිදුවීමේ හැකියාවක් තිබේ නම් නමුත් ඒ සඳහා සූදානමක් නොමැති නම්, ව්‍යසනය සිදුවුවහොත් ඇතිවන බලපෑම් ආපසු හැරවිය නොහැකි අහිතකර ප්‍රතිවිපාක ඇති කරයි.

++++ මෙම අයහපත් කාලගුණය පිළිබඳ යාවත්කාලීන කිරීම් මම දිගටම ලබා දෙන්නෙමි ++++++

  • නාගමුතු ප්‍රතිපරාජා-

Date: Monday, November 24, 2025, 4:00 PM

Disaster Emergency Alert

The atmospheric circulation patterns over the southwestern and southeastern regions of Sri Lanka are projected to shift eastward and westward, respectively, and will converge tomorrow, November 26, 2025. This convergence is expected to intensify into a low-pressure system moving southward, initially encompassing the entire landmass of Sri Lanka, before progressing along the eastern coastline—partly over land and partly over sea. On November 27, 2025, the system is anticipated to strengthen further, advancing along the eastern coast and approaching the Northern Province. By November 30, 2025, it is predicted to move further north, leaving the Northern Province behind.

As a consequence, widespread heavy rainfall is forecasted across numerous regions, including the Northern and Eastern Provinces, commencing tomorrow.

Furthermore, from November 26 to November 29, 2025, the Northern and Eastern Provinces, alongside substantial parts of the Western, Southern, Central, Sabaragamuwa, Uva, and North Central Provinces, are expected to experience extremely heavy rainfall.
Winds are forecasted to reach speeds of 50-70 km/h in the Eastern, Southern, Western, Central, Sabaragamuwa, and Uva Provinces starting from November 26. Subsequently, from November 27, similar wind speeds are predicted for the Northern and North Central Provinces.

Many rivers in the Southern, Western, Sabaragamuwa, Central, and Uva Provinces are already overflowing, leading to flooding in numerous locations. Heavy rainfall is anticipated to persist in the coming days.

The Northern and Eastern Provinces have recently suffered flooding due to sustained heavy rains, with further extreme rainfall expected in the near future.

Immediate Precautions and Actions

  1. All relevant governmental departments and local authorities across Sri Lanka must undertake urgent precautionary measures to address the imminent threat of heavy rains, high-velocity winds, and flooding from November 25 to November 30, 2025.
  2. Citizens nationwide, especially in the Northern and Eastern Provinces, should prepare themselves comprehensively for potential major disasters. Particular vigilance is advised for residents in low-lying areas, along riverbanks, and near water bodies.
  3. Media outlets—print, electronic, and social—must disseminate accurate information regarding this impending disaster, its potential impacts, and protective measures, ensuring the communication is clear and reassuring, avoiding unnecessary panic. Relevant authorities should provide verified data for this purpose.
  4. Given that climate-related disasters can often be forecasted in advance, adherence to early warnings and official directives will enable communities to safeguard themselves effectively.
  5. All fishermen are prohibited from venturing into the sea from tomorrow, November 25, until November 30, 2025.
  6. Farmers in the Northern and Eastern Provinces are advised to suspend all agricultural activities, including fertilization and the application of pesticides or herbicides, until November 30, 2025.
  7. Refrain from using roads marked as hazardous or dangerous throughout the country.
  8. The Eastern Province is expected to experience very heavy rainfall on November 27 and 28.
  9. There is also a possibility of intense rainfall on November 28 and 29.

10. Accordingly, administrative authorities in the aforementioned provinces and districts should undertake adequate preparations to mitigate the impacts.

Weather forecasts are fundamentally based on modeling and are inherently subject to deviations. While preparedness minimizes harm, unanticipated deviations may occur. Effective disaster readiness ensures safety; conversely, lack of preparation in the face of potential calamities can result in irreversible consequences.

I shall continue providing updates regarding this volatile weather situation.

——- Nagamuthu Piratheeparajah ——