நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்!
தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி
( வி.ரி. சகாதேவராஜா)
“மக்கள் வரிப்பணம் மக்களின் அபிவிருத்திக்கு”
என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக
நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட பணிகள் இன்ட (20) வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஏலவே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நடாத்திய நேரடி சந்திப்பின் பயனாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் போது கடந்த முப்பது வருடங்களாக போக்குவரத்துக்கு சிரமமாக இருந்த பழைய உஹன வீதியை செப்பனிட்டுவதற்கான திட்ட வரைவுகள் கையளிக்கப்பட்டது.
.இதன் பலனாக நேற்று அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பழைய உஹன வீதிக்கு 10369413.50 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



