பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல் : மலர் மாலையை கழட்டி வீசிவிட்டு வெளியேறிய ஆதம்பாவா எம்.பி !


இது அரசாங்கம் போடும் வீதி! நீங்கள் பேஸ்புக்கில் போட்டு உரிமை கோரினால் இனி வீதி வராது! நாவிதன்வெளியில் இன்று நடந்த சம்பவம்!

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பழைய உஹன வீதி முதற்கட்ட அபிவிருத்தி பணிக்காக 475 மீற்றர் தார் விதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தெரிவித்த கருத்து!…


படம் காட்ட நினைத்ததால் வந்த வினை
நாவிதன்வெளி

தவிசாளரால் துரத்தப்பட்டார் வபா
பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அடிக்கல் நாட்டு விழா


மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி – அரசியல் சாயம் பூச வேண்டாம்” – தவிசாளர் ரூபசாந்தன்

பாராளுமன்ற உறுப்பினரின் உரைக்கு மாறுபட்ட வகையில், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,

“பிரதேச மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் அபிவிருத்திக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு. இது பொதுத் திட்டம்; எந்தக் கட்சியின் பெயரும் சேர்க்க வேண்டாம்.”
என்று நேரடியாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உரிமை வாதத்தை எதிர்த்து, இது மக்கள் நிதியில் இருந்து நடக்கிறது என்பதையே அவர் வலியுறுத்தினார்.

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பழைய உஹன வீதி முதற்கட்ட அபிவிருத்தி பணிக்காக 475 மீற்றர் தார் விதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இந்த அபிவிருத்தியை யாரும் உரிமை கொண்டாட முடியாது தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி என்று குறிப்பிட்டார். இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மக்கள் வரிப்பணத்தில் மூலம் ஏற்படும் அபிவிருத்தியை மக்கள் உரிமை கொண்டாட முடியும் என பதில் கூறினார். இதனால் அரசியல் சாயம் பூச வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா நிலைதடுமாறி அணிந்து இருந்த பூ மாலையை கழற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யாரும் முகநூலில் பதிவிட்டால் இந்த பிரதேசத்திற்கு எந்த அபிவிருத்தியும் வராது என குறிப்பிட்டு தனது வாகனத்தில் பயணிக்க எத்தனித்தார். மீண்டும் வருகை தந்து திரை நீக்கம் செய்த பின்னர் எந்த ஒரு நிகழ்விற்கும் யாருக்கும் மாலை மரியாதை செய்ய கூடாது என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரன் அவர்களிடம் கடும் தொனியில் கூறியமை மக்களை முகம் கூச செய்தது .–