அம்பாறை மாவட்ட  புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

பாறுக் ஷிஹான்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி  அம்பாறை மாவட்டத்திற்கு  பொறுப்பான அதிகாரியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக  இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவ்வாறு  புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளைப் பொறுப்பேற்க வந்தபோது  அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட பின்னர்  சர்வமத பிரார்த்தனையுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.அவரது பதவியேற்பு நிகழ்வில்   பிராந்தியங்களுக்குப் பொறுப்பான   உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.