இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி எய்தி இளம் சைவப் பண்டிதர் தகுதியைப் பெற்றுள்ளார். இவர் பெரிய நீலாவணை சிறிதரன் – பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வியும், பிரபல வைத்தியராகவும் சோதிடராகவும் கரைவாகு வடக்கு கிராமாட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்து அமரான கணபதிப்பிள்ளை வைத்தியரின் பேர்த்தியும் ஆவார்.

அகில இலங்கை சைவ பண்டிதர் சபை இவ்வாண்டு சைவப் பண்டிதர் மற்றும் இளம் சைவ பண்டிதர்களுக்கான பரீட்சைகளை நடாத்தி இருந்த நிலையில் இருவர் சைவ பண்டிதர் பரீட்சையிலும் 30 பேர் இளம் சைவப் பண்டிதர் பரீட்சையிலும் தேறியுள்ளதாக அறிவித்திருந்தது.

குறித்த இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரும், திருமலை மாவட்டத்தில் ஐந்து பேரும், அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் பதுளை, கண்டி, நுவரேலியா முதலிய மலையக மாவட்டங்களிலிருந்து அறுவரும் புத்தளத்திலிருந்து ஒருவரும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஒருவருமாக 30 பேர் தேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.