தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்!
( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2025.11.07 ஆம் தேதி வெளியாகும்.
2026 ஜனவரி மாதம் நேர்முகப்பரீட்சை நடைபெறும்.
கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான பதிவு 2026 பெப்ரவரி மாதம் நடைபெறும்.
பாடநெறியின் பெயர் ” Higher National Diploma in Teaching “. (NVQ level -06) “உயர் தேசிய கற்பித்தல் டிப்ளமோ” என மாற்றப்படும். (NVQ நிலை -06) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.புதிய பாடங்கள் மற்றும் பாடப் பெயர்களின் மாற்றங்கள் புதிய வர்த்தமானியில் இடம்பெறும்.
தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுனர்களுக்கான இறுதிப் பரீட்சை 2026.06.08 தொடக்கம் 2026.06.18 வரை நடைபெறும். 2 ஆம் வருட ஆசிரியப் பயிலுனர்களுக்கான கட்டுறுப்பயில்வு 2026.07.18 ஆம் திகதி ஆரம்பமாகும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
