இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதை உலக வங்கி எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தப் போக்கு பணியமர்த்தல் முறைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச் மாதத்துக்கு இடையில், தெற்காசிய பிராந்தியத்தில் AI தொடர்பான வேலைப் பதிவுகளின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2.9% இலிருந்து 6.5% ஆக அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது, AI அல்லாத வேலைப் பட்டியல்களை விட தோராயமாக 75 சதவீதம் வேகமாக வளர்ந்துள்ளது.
சட்ஜிபிடி போன்ற செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் சேவை முகவர்கள், கணக்காளர்கள் மற்றும் ஒப்பு நோக்குநர்கள் போன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் AI க்கு மிகக் குறைந்த வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும், பூட்டான் மற்றும் இலங்கை அதிக வெளிப்பாடு விகிதங்களைக் காட்டுகின்றன என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒப்பீட்டளவில் அவர்களின் அதிக திறமையான மற்றும் படித்த பணியாளர்களைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிடுகிறது.
