உலக போலியோ தினத்தையொட்டி – மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி -ஏற்பாடு மட்டக்களப்பு ரோட்டரி கழகம்

இன்று மட்டக்களப்பு ரோட்டரி கழகம் சார்பாக அதன் தலைவர் மு. பார்த்திபசுதன் தலைமையிலும் கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் ஒருங்கிணைப்பிலும் , உலக போலியோ தினத்தையொட்டி மாபெரும் வாகன பேரணியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

நூற்றுக்கணக்கான ரோட்டேரியர்கள், இளைய ரோட்டராக்டர்கள், இன்டராக்ட் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பேரணி தொடங்குவதற்கு முன், மட்டக்களப்பு ரோட்டரி மையத்தில் சிறப்பு திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றவர்கள்:
• திரு. எஸ்.ஜே. அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட அதிபர்
• திரு சிவம் பாக்கிநாதன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர்
• டாக்டர் ஆர். முரளிளீஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர்
• டாக்டர் (திருமதி) கலாரஞ்சினி கணேசலிங்கம், பணிப்பாளர் , போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு
• திரு. பண்டாரா, தலைமையக காவல்துறை ஆய்வாளர்
• மரு. டாக்டர் எம். உதயகுமார், மருத்துவ அதிகாரி, MOH மட்டக்களப்பு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஓய்வுநிலை பணிப்பாளர் ச.நவநீதன் ,

இந்த நிகழ்வு மட்டக்களப்பின் அனைத்து ரோட்டரி கழகங்கள், ரோட்டராக்ட் மற்றும் இன்டராக்ட் கழகங்கள், RDHS மற்றும் MOH அலுவலக பணியாளர்கள் இணைந்து நடத்திய ஒற்றுமையின் சின்னமாக அமைந்தது.

இது சமீப ஆண்டுகளில் மட்டக்களப்பு ரோட்டரி கழக வரலாற்றில் மிகச் சிறப்பான நிகழ்வாக திகழ்கிறது.

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் சமூக சேவைச் சிறப்புகள்

எங்கள் கழகம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது:
✅ கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்
✅ டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு
✅ மாணவர்களுக்கு ஊக்கவுரை மற்றும் தொழில் வழிகாட்டல்
✅ கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்
✅ மரநடுகை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குறைப்பு முயற்சிகள்
✅ பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
✅ குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள்

சமீபத்தில் எங்கள் கழகம் ஆஸ்திரேலிய ரோட்டரி கழகத்துடன் இணைந்து,
மட்டக்களப்பு கற்பித்தல் மருத்துவமனைக்காக CT Scan இயந்திரம் மற்றும் விபத்து & அவசர சிகிச்சை கட்டடம் வழங்கிய பெருமை பெற்றுள்ளது.

உலக போலியோ ஒழிப்பு முயற்சி – GPEI

ரோட்டரி இன்டர்நேஷனல் தலைமையில், WHO, UNICEF, CDC மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த உலகளாவிய முயற்சி மூலம், போலியோ தற்போது உலகிலிருந்து பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் போலியோவை முழுமையாக ஒழித்த முதல் நாடு இலங்கை என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்

அடுத்த நடப்பு ஆண்டு தலைவராக கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவாகியுள்ளது.
மேலும் சிறப்புக்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை

“End Polio Now – ஒன்றிணைந்து, போலியோ இல்லா உலகை உருவாக்குவோம்!”