சர்வதேச முதியோர் தின நிகழ்வு சமூக சேவை திணைக்கள அம்பாறை பணிமனையின் ஏற்பாட்டில் நிந்தவூரில் கடந்த 22 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களப்பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், முதியோர்கள் பங்குபற்றிய கலை நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் என்பனவும் இடம் பெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்திப் மற்றும் திணைக்கள அதிகாரிகள், முதியோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







