கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் நேற்று 13/10/ 2025 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. பிரம அதிதியாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா, M.P ( deputy minister of foreign affairs and foreign employment)அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக very Rev.Fr.சுஜிவா அஞ்சலோ பத்திரன S.J ( provincial superior – the societyof jesus – srilanka) அவர்களும், very Rev. Bro. அந்தோனி கிரிஸ்துராஜன்( regional superior- Brothers of charity – srilanka) அவர்களும், very Rev. Sr.M. நிலாந்தி A.C ( provincial superior – Apostolic caramel congregation – srilanka) அவர்களும், very Rev. Bro. கென்ரி டசாநாயக்க FSC ( former provincial visitor & councillor de la salle Brothers – srilanka – india) அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக Mr. சிந்திக்க அவேவிக்கரம ( district secretary ampara), Mr. பலன் பற்குனன்( senior assistant audit General nationalauditoffice), Mr.M.S. சகுதுல் நஜீம் ( Zonal director of education – kalmunai), MR.V. ராஜசேகர்( private secretary hon governor – Eastern provincial), Dr.G.சுகுனன் ( DIRECTOR BASE hospital – kalmunai), Mr.T.J.அதிசயராஜ்( Divisionalsecretary – kalmunai north, Mr.A.T.M. ரபி ( municipal commissioner – kalmunai) அவர்களும் , ஆனமீக அதிதிகளாக Very Rev.Fr.j.ஜியோர்ஜ் ஜிவராஜ் (vicar General – Diocese of batticaloa), சிவ ஸ்ரீ சபாரட்ன குருக்கள் , A.L.M.முர்சித் ( தலைவர் ஜய்மத்துல்லா உலாமா சபை -கல்முனை) என்பவர்களும் கலந்து சிறப்பித்தனர்

குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்ற பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் கடந்த ஒரு வருடங்களாக பல்வேறு நிகழ்வுகளாக இடம் பெற்று நேற்று இறுதி நிகழ்வாக நடைபெற்றது.