உலக ஆர்த்திரைட்டிஸ் தினம் (அக்டோபர் 12) குறித்து அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர்  ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,

ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம், உறுதிப்பாடு போன்ற பிரச்சனைகளால் ஒருவரின் நாளாந்த வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தமது இயல்பான இயக்கத்தை இழந்து, மனஅழுத்தத்துடனும் உடல் வலியுடனும் வாழ வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்நிலையில், பலர் முதலில் மேற்கத்திய (ஆங்கில) மருத்துவத்தை நாடுகிறார்கள்.

மேற்கத்திய மருத்துவத்தை நாடிச்சென்ற பல நோயாளிகள் தமது முழங்கால் மூட்டுகளை மேலும் பாதிப்புறச்செய்து கால்களை வளையச்செய்து ஆங்கில மருத்துவத்தால்  கைவிடப்பட்ட நிலையிலேயே சித்த மருத்துவமனைகளை நாடிவருகின்றனர். ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அதன் பக்கவிளைவுகள் உடலை மேலும் பாதிக்கின்றன. வலி குறைப்பதற்கான மருந்துகள் காலப்போக்கில் சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் அபாயம் அதிகம். இவ்வாறு, “இருப்பதையும் இழக்க நேரிடும்” நிலையை நோயாளிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆங்கில மருந்துகள் உடலை மேலும் பாதிக்கின்றன. மாறாக, சுதேச மருத்துவம் – சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரிய முறைகள் – நோயின் மூல காரணத்தை ஆராய்ந்து, உடல் தாதுக்கள் சமநிலையைக் காக்கும் வழியில் செயல்படுகின்றன. சித்த மருத்துவத்தில் ‘வாத நோய்கள்’ என வகைப்படுத்தப்படும் ஆர்த்திரைட்டிஸ் நோய், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, உடல் தாதுக்கள் சமநிலையின்மை ஆகியவற்றின் விளைவாக கருதப்படுகிறது.

இதற்கு சித்த மருந்துகள் மூலமாக உடலில் தேங்கிய வாதத்தை நீக்கி, இரத்தச் சுழற்சியை மேம்படுத்தி, மூட்டுகளில் ஏற்பட்ட கடினத்தன்மையையும் வலியையும் குறைத்து உடல் இயக்கத்தை மீட்டெடுக்க உதவுகின்றன.  நோயாளி முழுமையாக ஆரோக்கியம் பெறுவது சாத்தியம்.

சுதேச மருத்துவம் நோயை குணப்படுத்துவதற்குப் பின், அதே நோய் மீண்டும் வராமல் தடுக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இவை உடலையும் மனதையும் ஒருங்கிணைந்த முறையில் குணப்படுத்தும் முழுமையான மருத்துவ முறை எனலாம்.

அதனால், ஆர்த்திரைட்டிஸ் நோய்க்கு சுதேச மருத்துவமே நம்பகமான, நீடித்த தீர்வு ஆகும். இம்மருத்துவம் தாய்மண்ணின் பாரம்பரிய ஞானத்தின் சான்றாக இருந்து, இன்றைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வழியாக திகழ்கிறது.

ஆங்கில வைத்திய முறையில் இதுவரை எந்தவிதமான நிரந்தர மருத்துவமும் இல்லை. நோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இல்லாத நிலையில், நோயாளிகளை தவறாக வழிநடத்துவது நியாயமல்ல. ஆங்கில மருத்துவத்தில் தற்போது வழங்கப்படும் மருந்துகள் — வலி நிவாரணி (pain killers), வீக்கம் குறைக்கும் (anti-inflammatory) மற்றும் நோய் வளர்ச்சியை தாமதப்படுத்தும் மருந்துகள் — தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றன. ஆனால் இவை நோயின் அடிப்படை காரணத்தை குணப்படுத்துவதில்லை.

“மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி தவறான வாக்குறுதிகள் அளிப்பது மருத்துவ நெறிமுறைக்கு எதிரானது. மருத்துவர் ஒருவரின் கடமை உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, நோயாளிக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவதாகும். ஆர்த்திரைட்டிஸ் போன்ற நீடித்த நோய்களுக்கு உணவு பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் இணைந்த முழுமையான அணுகுமுறையே அவசியம்.

 “சித்த மருத்துவம் உடலின் தாதுக்கள் சமநிலை பெறும் வகையில் நோயின் அடிப்படைக் காரணத்தை தீர்க்கும் தன்மை கொண்டது. எனவே, மக்கள் பல மருத்துவ வழிமுறைகளையும் ஆராய்ந்து, தகுந்த நிபுணர்களின் ஆலோசனையுடன் சித்த மருத்துவத்தின் நன்மைகளைப் பெற வேண்டும்.

ஆங்கில மருத்துவர்கள் மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்வது அவசியம். ‘முழு குணம்’ என தவறாக கூறுவதற்குப் பதிலாக உண்மையை விளக்குவது தான் உண்மையான மருத்துவ சேவை.

இலங்கையின் அரசாங்க சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவமனைகள், ஆர்த்திரைட்டிஸ் (arthritis) போன்ற வாத நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன் இம் மருத்துவமனைகள் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்குகின்றன.

பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள  சித்த போதனா வைத்தியசாலைகள்,  கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, கப்பல்துறை  ஆதார வைத்தியசாலை, மன்னார்,  வவுனியா, கிளிநொச்சி தளவைத்தியசாலை, மாதம்பே ஆதார மருத்துவமனை,  மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனை, கொடிகாமம், பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலை மேலும் பல…….

இவற்றுக்கு மேலதிகமாக அனைத்து பிரதேச சபைகளின் கீழே இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகளினூடாக பொதுமக்கள் துல்லியமான சேவைகளை இலவசமாகப் பெற முடிந்தாலும்  போதியளவு விழிப்புணர்வு இல்லாமையினால் பொதுமக்கள் இவற்றை அனுபவிக்கவில்லை என்றே கூறமுடியும்

இலங்கையில் சித்த மருத்துவ முறையில் புற சிகிச்சைகளாக பல்வேறு பரிசோதிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட முறைகள் உள்ளன.  அவையாவன,

1.தொக்கனம் (Thokkanam) – தாவர எண்ணெய்களால் செய்யப்படும். வாத நோய்கள், தசை வலிகள் மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் சக்தி சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது .

2.ஒற்றடம் (Ottradam) – வெப்ப சிகிச்சை. இது வெப்பம் மூலம் செய்யப்படும் சிகிச்சை முறையாகும். இது மூட்டு வலிகளை குறைத்து, தசை வலிகளை நீக்க உதவுகிறது .

3.பற்று (Pattru) – வெவ்வேறு தாவரங்களின் தூள்களை சேர்த்து தயாரிக்கும். வாத நோய்களை குறைக்கும் திறன் கொண்டது. இது மூட்டு வலிகளை நீக்குவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது .

4.வர்மம் (Varmam) – புள்ளி சிகிச்சை- இது சித்த மருத்துவத்தில் முக்கியமான புற சிகிச்சையாகும். மூட்டு வலிகள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க, குறிப்பாக Shoulder pain போன்றவற்றை சிகிச்சை செய்ய உதவுகிறது .

5.பூச்சு (Poochu) – தடவுதல்- தாவரங்களின் திரவங்களை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவதன் மூலம், வாத நோய்களை குறைக்க உதவுகிறது.

போன்ற பல்வேறு சித்த சிகிச்சை முறைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்

இலங்கையில் பலர், குறிப்பாக ஆர்த்திரைட்டிஸ்ச் போன்ற நீண்டகால வலி மற்றும் மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள், சித்த மருத்துவம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உடனடி சிகிச்சை தேடும் எண்ணத்தால் ஆங்கில மருத்துவத்தை (Western Medicine) நாடி செல்லுகின்றனர். இதனால் நோய் நிலை மேலும் மோசமடையக்கூடும். ஆதலால் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரச சுதேச மருத்துவமனைகளினூடாக சிறந்த சேவையை இலவசமாகப் பெற்று பூரண குணமடையமுடியுமென அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்