விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச

​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

​ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜயதிஸ்ஸ, உரிய அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறினார்.

​சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் சலுகைகள் (நீக்க) சட்டத்தின் காரணமாக, அந்த இல்லத்தை விட்டு வெளியேறிய மஹிந்த ராஜபக்ச தங்காலைக்குச் சென்றுள்ளார்.

​கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

thanks ARVL