கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

…..

கரூர் பிரசார கூட்ட விவகாரத்திற்கு திமுக கட்சியினரே காரணம் என தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, விஜயின் பெயரைக் கெடுப்பதற்கு திமுக கட்சியினர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர் எனவும் விஜய்க்கு ஆதரவாக வந்த தொண்டர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை நாட்டில் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திமுகவினர் உயிரை எடுத்து அரசியல் பண்ண வேண்டும் என நினைத்தால் மக்கள் அதற்கான தீர்வை தருவார்கள் எனவும் விஜயின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மக்களிற்கு பாதுகாப்பிற்கு கொடுக்க கூட அரசாங்கத்திற்கு துணிச்சல் இல்லை எனவும்  தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்

இதில் 12 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.