ஜதிஸ்குமாரின் ஓவியக் கண்காட்சி நாவிதன்வெளியில் ; மூன்று தினங்கள் சிறபபாக இடம் பெற்றது
- கே.எஸ்.கிலசன்-
நாவிதன்வெளி மத்தியமுகாமில் பிறந்து வளர்ந்து றாணமடு இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து தற்போது நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் பணி புரியும் வெற்றி ஜதிஸ்குமார் ஒரு ஓவியக் கலைஞராக சமூகத்துக்கான தன்பணியை செய்து வருகிறார்.
அவரது கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் காட்சிப்படுத்தல் கடந்த 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெற்றி ஜதிஸ்குமாரின் ‘மீண்டெழல்’ எனுந் தலைப்பிலான ஓவியக்காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) மாலை 05 மணி வரையும் இடம்பெறவுள்ளது.
மிகப்பெரும்பாலும் நகரங்களையும், ஓவியக் காட்சிக் கூடங்களையம் மையமாகக் கொண்டு நவீன ஓவியக் காட்சிகள் நடைபெற்றுவரும் பின்புலத்தில் தற்சார்பான விவசாயப் பொருளாதாரப் பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட நாவிதன்வெளி எனும் அழகிய ஊரில் இக்காட்சி நடைபெறுவது கவனத்திற்குரியது.
எமது கலைஞர்களை வளர்க்கவும் அவர்களது கலைப் படைப்புக்களை கண்டு ரசிக்கவும் இவ்வாறான கண்காட்சிகளுக்கு மக்கள் முக்கியத்துவமளிக்க வேண்டும்.











தொடர்புடைய செய்தி