கல்குடா கல்வி வலய கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்யாலயத்தின் பரிசளிப்பு விழாவும் அழகு தசாப்த விழாவும் 2025 .9. 20 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் சி. சிவனேசராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக எஸ். ஏ.ரிஸ்னியா பானு பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் கல்குடா கல்வி வலயம் அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏனைய சிறப்பு அதிதிகளும் பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோறளைப்பற்று கோட்ட அதிபர்கள் , இப்பிரதேசத்தின் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் ,ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்

விழா காலை 7 மணிக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி பாடசாலையை வந்தடைந்த பின்னர் கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலையில் பல்வேறு வகைகளிலும் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இப்பாடசாலையானது கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்காக பல்வேறு சிறப்பான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் கல்வி விருத்திக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது.

இந்நிகழ்வானது பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் நடேசன் காண்டீபன் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.