சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு
-என் – சௌவியதாசன் –
சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா விஜயகுமாரன் குபேரலட்சுமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வி கஜானந் அவர்களின் 17 ஆவது பிறந்த நாளைமுன்னிட்டு அவர்களது முழுமையான நிதி பங்களிப்பில், பாண்டிருப்பில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றுக்கு அன்பு இல்லம் -09 வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று பாண்டியிருப்பில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர். எம். ஜெயராஜியின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக. மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர். டாக்டர் இரா. முரளீஸ்வரன் அவர்களும். கல்முனை வடக்கு பிரதேச செயலாளர். ரி.ஜே அதிசயராஜ் அவர்களும். மற்றும் சிறப்பு அதிதிகளாக. ஊடகவியலாளரும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளருமான. விபுலமணி வீ.ரி சகாதேவராஜா, சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் பணிப்பாளர். திரு விஜயகுமாரன் அவர்களின் துணைவியார் குபேரலட்சுமி. மற்றும். பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்ற பிரதிநிதிகள், ஆலய பரிபால சபையினர், சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் தாயக உறவுகள், என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று காலை 11.30 சுப வேளையில் சமய முறைப்படி பால் காச்சி சம்பிரதாய பூர்வமாக வீடு குடி போகும் நிகழ்வும் மாலையில். அவ்வீடு பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. பாண்டிருப்பு சர்மிலன் வீதியைச் சேர்ந்த திரு திருமதி புலேந்திரன் சந்திரிகா தம்பதியினருக்கு இந்த வீடு கையளிக்கப்பட்டது.
























