இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்
ஆலையடிவேம்பில்!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சி.குகதாசன், இரா.சாணக்கியன், கவி. கோடீஸ்வரன், டா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத்
மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பிரேரணை வரைவு தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
மற்றும் கட்சி சார்ந்த பல பிரச்சனைகள் சவால்கள் மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டன.









