கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு ஏற்பாடு செய்த கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் கனடாவில் சிற்பபாக இடம் பெற்றது.
கடந்த 30.08.2025 சனிக்கிழமை இடம் பெற்ற இந்த ஒன்று கூடலில் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய மக்கள் பெருமளவில் ஒன்று கூடி இருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி

கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

கனடா வாழ் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடலுக்கான வாழ்த்துக்கள்.

எதிர்வரும் சனிக்கிழமை 30. 8.2025 கல்முனைப் பிரதேச கனடா வாழ் உறவுகள் ஒன்றிணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இது காலத்தின் தேவை என்பதை அறிந்து உள்ளீர்கள்.
கல்முனை பிரதேச மக்கள் பல நேரானதும், மறைமுகமானதுமான சவால்களை தினசரி அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் மென்றுகொண்டு வாழ்கின்றனர். இப்பிரதேச மக்களாகிய நீங்கள் உங்கள் உறவுகள் மூலம் இதை அறிந்திருப்பீர்கள்.
அதே சவால்களை நிர்வாகிகள் ஆகிய நாங்களும் எதிர்கொள்கின்றோம் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என்ற முக்கிய விடயங்களில் இன்னலுறும் மக்களின் பிரச்சினைகளை நீங்களும் அறிவதன் மூலமே தீர்வுகளையும் காண முடியும்.
அந்த வகையில் உங்கள் உருவாக்கம் வீறு கொண்டு எழ வேண்டும். அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.
உங்கள் ஒன்றிணைவு, எதிர்காலம் எம்மைப் போன்ற நிர்வாகிகளுக்கு பக்க பலமாக அமையும் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றேன். உங்கள் எதிர்கால வளர்ச்சி, பலம் என்பன எங்கள் பலம் என்பதை இன்று தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

கல்முனை பிராந்திய இணையம்- கனடா அமைப்பு
உருவாகியுள்ளதும், 
30.08.2025  முதல் முறையாக ஒன்று கூடவுள்ளதும் மகிழ்வான விடயம்.
இங்கு உறவுகள் அனைவரும் கலந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
இக் கனடா அமைப்பானது  மிகப் பலமான அமைப்பாக உருவாகவும் அதன் செயல் வீச்சு எங்கும் பரவவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குணசிங்கம் சுகுணன்,
பணிப்பாளர்.
ஆதார வைத்திய சாலை
கல்முனை.
Dr. சுகுணன் வாழ்த்து செய்தி

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய இணையம் கனடா ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு கல்முனை பிரதேச மக்களின் கல்வி ,பொருளாதாரம், பிரதேச அபிவிருத்திக்கு பக்கபலமாக மேலும் வலுவுடன் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

10.08.2025 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நோ.விஜயரெத்தினம் தலைமையில் ஒன்று கூடி நிருவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது

தலமை ஒருங்கிணைப்பாளர்: விஜயரட்ணம்

தலைவர்: விஷ்வலிங்கம் கணபதிப்பிள்ளை
உப தலைவர்:ஜெயராஜ் வல்லிபுரம்
செயலாளர்:வேலுப்பிள்ளை பத்தமநாதன்
உப செயலாளர்: கிரிஷாந் தீபச்செல்வம்
பொருளாளர்: கோபிகிருஷ்ணன் குமாரசூரியம்
உப பொருளாளர்:செல்வநேசன் வேலுப்பிள்ளை

நிருவாக சபை உறுப்பினர்கள்
பிறேமானந்தம் பரமானந்தராஜா
தேவதூயன் செல்வராஜா
சிறி தம்பிப்பிள்ளை
அகிலன் குலசபாநாதன்
அனந்தலிங்கம் வைரமுத்து
திருச்செல்வம் தங்கரூபன்
ஹிரோசன் டெரிக்ஜோன்
பதிசன் தேவராசா

அனைவருக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

புகைப்படங்களை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்

https://drive.google.com/drive/folders/157uHWMoGWl3NpkhEVSxw3wi_AvtNL5JK?fbclid=IwQ0xDSwMhkmdleHRuA2FlbQIxMQABHr0HuREjaAG826CjKVlQAbGc_v6T-bYKZ824JITC7usPnVdku86sC313kD34_aem_r9Fl_s29DE7dMLZLJ7qX8w

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=559430370591005&rdid=kbvQQSQDaiMfebjx