அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) இன் துறைசார் மூத்த இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு 31.08.2025 நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
வவுனியா மாநகரசபை மண்டபத்தில் திருக்கேதீஸ்வரன் குருசாமி (நிறுவுனர் தலைமை ஒருங்கிணைப்பாளர் SCSDO அவர்களின் வழிநடத்தலில் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் தலைமையில் நிகழ்ந்தேறியது.
சிறப்பாக நடை பெற்ற இந் நிகழ்வில் முக்கிய பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
முதன்மை விருந்தினராக முனைவர். அ . நசீமா (கிராண்ஸ் பல்கலைக்கழகம் – சென்னை, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, திரு.தி. திரேஸ்குமார், (மேலதிகப் பணிப்பாளர், தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்), திரு. நா . கமலதாசன் ( மேலதிக மாவட்ட செயலாளர், வவுனியா), திரு. தெ . ரதீஸ்குமார் ( உதவி மாவட்ட ஆணையாளர், உள்ளூராட்சித் திணைக்களம், வவுனியா)ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலைநிலா கலாலயம், சிதம்பரேஸ்வரா நடனாலயம் ஆகிய கலைக் கூடங்களும் கலந்து சிறப்பித்தன.
38 ஆளுமைகளுக்கு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.













