இனவாதத்தை வாக்குகளுக்காக கக்கி நாட்டையும் சூறையாடி வக்குரோத்து நிலைமைக்குள்ளான நாட்டை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ,முன்மாதிரியான திட்டங்கள் மக்கள் மத்தியில பேராதரவை பெற்று வருகின்றது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறும் நாளில் இன்று யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலககம் மற்றும், சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இங்கே நிறுவப்பட்ட கல்வெட்டுக்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மொழிக்கு முன்னுரிமையும், கல்வெட்டில் ஜனாதிபதியின் பெயரை தவிர்த்து பொதுவுவாக இலங்கை நாட்டின் ஜனாதிபதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பாராட்டி வருகின்றனர். இதேவேளை தமிழ் கட்சி அரசியல்வாதிகளும் கட்சி பேதத்திற்கப்பால் பாராட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.. மாற்றம் சிறப்பு