பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா
கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (28) முற்பகல் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இன்று முற்பகல் சுப வேளையில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
கல்முனை முதல் பெரிய நீலாவணை வரை உள்ள இந்து ஆலயங்களின் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.












