இன்று (28) காலை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியானவர் பெரிய நீலாவணை ஆரோக்கியம் வீதியைச் சேர்ந்த டேவிட் பாஸ்கரன் வயது 56 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 3 பிள்ளைகளின் தந்தையையும் கல்முனை மாநகர சபையின் ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.