ரணில் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு ஆண்டவன் வழங்கிய தண்டனை இதுகல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ராஜன் 

( வி.ரி.சகாதேவராஜா)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே இது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார். தவிர தமிழ் மக்களுக்கு எந்த நீதியை பெற்று தரவில்லை .

அவரிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பல தடவை கேட்டிருக்கின்றோம். செய்து தருகின்றோம் என்றார் .

பாராளுமன்றத்தில் காலில் கூட விழுந்திருக்கின்றேன்.ஆனால் எதுவுமே செய்யவில்லை. துரோகம் செய்துள்ளார். அதைவிட  விடுதலை புலிகளை இரண்டாகப் பிரித்த நரித்தந்திரவாதி அவர்.

 அவருக்கு தமிழர்களோ முஸ்லிம்களோ இந்த தண்டனையை வழங்கவில்லை. இது இறைவனின் தண்டனை. என்றார்.