பொலிஸ் மா அதிபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம்

இலங்கை காவல்துறை, பொதுமக்கள் குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுமக்கள் இன்று முதல் 071-8598888 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக பொலிஸ் மா அதிபரை தொடர்புகொள்ள முடியும்.

இந்த புதிய இலக்கத்தின் ஊடாக குறுஞ்செய்திகள், காணொலிகள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பொலிஸ் மா அதிபருக்கு அனுப்ப முடியும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.

குற்றங்கள் மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.